Advertisement

வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையான நிதி மாற்றங்கள்

வேகமான வாழ்க்கை சூழ்நிலையில் எவ்வளவு சம்பாதித்தாலும் சம்பளம் வந்த இரண்டு மூன்று நாட்களில் அனைத்தும் EMI கட்டுவதற்கெ போய்விடுகிறது, சேமிப்பு பற்றிய ஆர்வம் யாரிடமும் இருப்பதில்லை, தேவை இல்லாத ஆடம்பரம் அனைத்தும் உங்களை பெரும் கடனாளியாக மாற்றுகிறது, வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையான நிதி மாற்றங்கள் இந்த பதிவில் பார்க்கலாம்.
Financial changes necessary for life improvement

தற்போதைய நிதி நிலைமையைப் புரிந்துகொள்வது

    நமது வருமானம் மற்றும் நமக்கு இருக்கும் செலவுகளை சரியாக நாம் கணக்கிடவேண்டும், மாதம் தோறும் இருக்கும் செலவுகளை முன்கூட்டியே திட்டமிடல்வேண்டும், அதேபோன்று நமக்கு இருக்கும் ஆசைக்கும் தேவைக்கும் இருக்கும் வித்தியாசத்தை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இவற்றை நாம் சரியாக செய்து வாந்தால் போதும் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கான முதல் படியை எடுத்து வைத்ததாக அர்த்தமாகும்.

சிறந்த நிதி பழக்கங்களை உருவாக்குதல்

    மாதாந்திர பட்ஜெட் ஒவ்வொரு மாதமும் தெளிவாக உருவாக்க வேண்டும். மேலே கூறியது போல கடன், அத்தியாச செலவுகள், அவசர செலவுகள் என அனைத்திலும்  பட்ஜெட் என்ற ஓன்று இருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் சரி வருமானத்தில் குறைந்தது 20% சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும். அதே பல எப்பவுமே 3 முதல் 6 மாத அவசர  செலவுக்கான பாதுகாப்பு தொகை என்று கொஞ்சம் கையில் எப்பவுமே இருக்க வேண்டும்.

கடன் மேலாண்மை

     நீங்கள் அதிகப்படியான கடன்கள் வைத்திருக்கலாம், அதில் அதிக வட்டி கடன்களை முதலில் அடைக்க முயற்சிக்க வேண்டும், ஏன் என்றால் அதிக வட்டி கடன்கள் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டு இருக்கு வேண்டும், ஆனால் வாங்கிய கடன் அளவு குறையாமல் அப்படியே இருக்கும். எனவே இதுபோன்ற கடன்களை தேர்வு செய்து அவற்றை வேகமாக அடைக்க யுத்திகளை வகுக்க வேண்டும்.

வட்டி கடன்களுக்கு பதிலாக EMI என்பது சற்று கடன் சுமையை குறைக்க உதவலாம், பல வட்டிக்கடன்களை அடைக்க வங்கிகளிடம் Debt Consolidation Loan என்ற வசதிகள் இருக்கும் அதன் மூலம் ஒரே EMI கடனாக வாங்கி மற்ற கடன்களை செலுத்திவிட்டு இந்த ஒரு emi மட்டும் செலுத்தலாம், இதன் மூலம் அசலும் வட்டியும் சேர்ந்து குறைந்து வரும். 

முதலீடு மற்றும் வெல்த் உருவாக்கம்

    நாம் சம்பாதிக்கும் வருமானத்தில் இருந்து சிறிய அளவிலான தெகையை ஒரு இடத்தில முதலீடு செய்து வருவதன் மூலம் வருங்கால வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையான நிதி மாற்றங்களை செய்யலாம். முதலீடு என்று எடுத்துக்கொண்டால் பங்கு சந்தை, Mutual funds, ETFs, SIP, Fixed deposit, Digital Gold Savings, RD, மற்றும் தங்க நகைகளாக வாங்கி வைப்பது போற்ற செயல்களை செய்வது நல்லது. 

ஏன் சேமிக்க வேண்டும்?

    சேமிப்பு என்பது வாழ்க்கையை பாதுகாக்க பயன்படும் ஒரு கருவியாகும்,  இன்றைய சிறு சேமிப்பு கூட நாளைய அவசரகலங்களில் பெரும் துணையாகும். இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் எப்போது நெருக்கடி வரும் என்று யாருக்கும் தெரியாது, வேலை இழப்பு, உடல்நல குறைவு, குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் போன்ற நிகழ்வுகள் திடிரென்று நிகழும், இதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

சிறிதாக தொடங்கினாலும் மாதம் தோறும் அல்லது 2 மாதங்களுக்கு ஒருமுறையாவது சின்ன சின்னதாக சேமிக்க தொடங்க வேண்டும். சேமிப்பு என்பது மன அமைதியை கொடுக்கும்.

வாழ்க்கை முறை சரிசெய்தல்கள்

      தேவையற்ற செலவுகளை முடிந்தவரை குறிக்க வேண்டும், மேலும் 2வதாக ஒரு வருமானத்தை உருவாக்க வேண்டும். 

பாதுகாப்பு மற்றும் எதிர்கால திட்டமிடல்

  வீட்டில் இருப்பவர்களுக்கும் உங்களுக்குமான மருத்துவ காப்பீட்டை எடுப்பது நல்லது, ஏன் என்றால் வருங்காலங்களில் மருத்துவ செலவுகள் 10% மேல் உயர வாய்ப்பு இருக்கிறது, எனவே மருத்துவ காப்பீடு(Life & Health insurance ), Retirement planning மற்றும் Children’s education fund போன்ற எதிர் கால செலவுகளுக்காக திட்டமிடல்களை செயல்படுத்த வேண்டும். 

      சிறு மாற்றங்களும் பெரிய விளைவுகளும் தரும், எனவே சிறிதாக சேமிக்கவும் அல்லது முதலீடு செய்யவும் தொடங்குகள் இது உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையான முக்கிய நிதி மாற்றங்களை உருவாக்கும். நிதி சுதந்திரம் = வாழ்க்கை சுதந்திரம் என்று கூறலாம். 

Post a Comment

0 Comments